“குடிச்சிருக்கியா?” தள்ளாடியபடி வீட்டுக்கு வந்த மனைவி… கணவனும் போதையில் இருந்ததால் நடந்த பயங்கரம்…!!

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ராம் கார் பகுதியைச் சேர்ந்தவர் உபேந்திரா(25). இவர் மனைவி ஷில்பி தேவி. 22. இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் உபேந்திரா தன்னுடைய வீட்டில் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது வெளியே சென்ற மனைவியும் வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த உபேந்திரா  குடிபோதையில் வீடு திரும்பியது குறித்து மனைவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் .

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த உபேந்திரா மனைவியை தாக்கியுள்ளார். மேலும் அவரை தூக்கி வேகமாக தரையில் போட்டதில் தலையில் பலத்த காயமடைந்த ஷில்பி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வந்த காவல்துறையினர் உபேந்திராவை கைது செய்தனர். மேலும் ஷில்பி  தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.