தமிழக அரசியல் களமே பரபரப்பில்… 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் இன்று TVK-வில் இணையும் செங்கோட்டையன்… செம குஷியில் விஜய்…!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையை நேற்று காலை சென்னை தலைமைச் செயலகம் சென்று சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பிறகு வெளியே வந்த அவரிடம் அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள் என்று பதில் அளித்துச் சென்றார். இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை பட்டினத்தோட்டத்தில் விஜய் வீட்டிற்கு செங்கோட்டையன் சென்று சந்தித்து பேசினார்.

தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா காரில் அங்கு வந்த செங்கோட்டையன் விஜயை சந்தித்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து முன்னால் எம்பி சத்யபாமா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இன்று காலை 10 மணிக்கு செங்கோட்டையன் இணைய உள்ளார்.

   

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் அலுவலகத்தில் இன்று செங்கோட்டையன் கட்சியில் இணையும் விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பனையூர் அலுவலகம் விழாக்கோலம் பூந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் செங்கோட்டையனுக்கு அவருடைய அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது. அதே சமயம் செங்கோட்டையனை தொடர்ந்து புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் இன்று விஜய் கட்சியில் இணைகின்றார். காரைக்கால் முன்னாள் எம்எல்ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளார்.