நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம், வலிமை ஆகியவற்றிற்கு காரணமாக இருக்கிறார். இந்த நிலையில் டிசம்பர் தொடக்கத்திலும் செவ்வாய் தனுசு ராசிக்குள் நுழைய இருக்கிறார். 18 மாதங்கள் கழித்து செவ்வாய் குருபகவானின் ராசிக்கு செல்ல உள்ளதால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். அந்த வகையில் தனுசு ராசிக்காரர்களுக்கு தைரியமும் வீரியமும் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பதில் சிறந்து விளங்குவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். தைரியம் அதிகரிக்கும். பணியிடத்தில் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மீனம் ராசிக்காரர்களில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். கௌரவம் அதிகரிக்கும் .தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணியிடத்தில் பெயரும் புகழும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
