“என்கிட்டயே சண்டைக்கு வரியாடா”… கட்டிய கணவனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவி… அடுத்து நடந்த பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மோகன் (45) என்பவருடைய மனைவி லட்பாய். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே நேற்று கணவன் மனைவிக்கு இடையே எப்போதும் போல வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த லட்பாய் வீட்டிலிருந்த கோடாரியால் கணவன் மோகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மோகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து மனைவியும் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். உடனே கிராமத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.