காலையிலேயே ஷாக்…. கொத்தாக நீக்கம்… முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து நேற்று மாலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு (SIR) தமிழகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் SIR பணிகளுக்குப் பிறகு 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

   

சுமார் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தங்கள் கட்சிகாரர்களிடம் இருக்கும் பட்டியலையும் தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. எதற்காக மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மட்டும் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.