திக் திக்… “அண்ணா… எங்களை காப்பாத்துங்க”… இடிபாடுகளுக்குள் இருந்து வந்த குழந்தையின் குரல்… டெல்லியில் உலுக்கிய சோகம்… நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ…!

By Swetha on புரட்டாதி 11, 2026

Spread the love

2022-ஆம் ஆண்டு டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் சில மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை காப்பாற்ற, அங்கிருந்த சக மாணவர்களும் மக்களும் அதிகாரிகளின் வருகைக்காக காத்திருக்காமல், தங்கள் சொந்த கைகளாலேயே சிமெண்ட் மற்றும் செங்கல் இடிபாடுகளை அகற்றும் பணியில் இறங்கினர். தங்களின் சக தோழர்களை மீட்க அவர்கள் காட்டிய பதற்றமும் முயற்சியும் அங்கிருந்த எல்லோரையும் உருக்கமடையச் செய்தது.

   

அப்போது இடிபாடுகளுக்குள் இருந்து “அண்ணா, எங்களை காப்பாற்றுங்கள்…” என்று ஒரு குழந்தையின் குரல் தீனமாக வெளிவந்தது. அந்த அலறல் குரலைக் கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மீட்பு படையினரின் கண்கள் கலங்கின. அதைத்தொடர்ந்து தீவிரமாக செயல்பட்ட மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி, உள்ளே சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.