ஐயோ பாவம்… பைக் தண்ணீர் லாரி மீது மோதி கொடூர விபத்து… 19 வயது கல்லூரி மாணவர் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

By Swetha on புரட்டாதி 11, 2026

Spread the love

கோயம்பேடு நூறு அடி சாலையில் வியாழக்கிழமை காலை நேரிட்ட சாலை விபத்தில், தொண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஸ்டீபன் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாண்டு BBA மாணவரான மாடின் (19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் அவருடன் பயணித்த சரண்ராஜ் (17) மற்றும் கிருஷ்ணன் (17) ஆகிய இரு மாணவர்கள் காயமடைந்தனர். ரோஹிணி தியேட்டர் பகுதியிலிருந்து வி.ஆர்.மால் நோக்கி சென்றபோது, கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம் நோக்கி வந்த தண்ணீர் லாரி மீது மோதி இந்த விபத்து நிகழ்ந்தது.

மூன்று மாணவர்களும் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த நிலையில், தலையில் பலத்த காயமடைந்த மாடினின் உடல் உடற்கூறு ஆய்விற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்ட அந்த லாரியை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த முகமது இக்பால் (43) என்பவரை கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

   

சம்பவ இடத்திலுள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நூறு அடி சாலையில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் இயங்குவதற்குத் தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.