அப்பா என அழைத்ததற்கு நன்றி.. இனி உன் வாழ்க்கையில் இருக்க மாட்டேன்.. அஜித்தின் ரீல் தம்பி வெளியிட்ட வீடியோ வைரல்..!

By Priya Ram on செப்டம்பர் 30, 2024

Spread the love

நடிகர் பாலா மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் இவர் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு புகழை தேடி தந்தது அஜித்தின் வீரம் மற்றும் ரஜினியின் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள்தான். வீரம் திரைப்படத்தில் பாலா அஜித்தின் தம்பியாக நடித்திருப்பார். இவர் பாடகி அமிர்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இந்த தம்பதியினருக்கு 12 வயதில் அவந்திகா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்ரிதா தனது கணவரை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு மருத்துவரான எலிசபெத் என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பாலாவின் மகள் அவந்திகா தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

   

 

அதில் என் அப்பா என்னை மிகவும் காதலிப்பதாக கூறி பல பரிசுகளை வாங்கி கொடுத்துள்ளார். அது உண்மை அல்ல. அப்பாவை காதலிக்க ஒரு சிறு காரணமும் இல்லை. என்னையும் என் அம்மாவையும் குடித்து சித்திரவதை செய்தார் என அவந்திகா வீடியோவில் பேசியிருந்தார். இந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக பாலா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி.

நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதி | nakkheeran

நான் உங்களுடன் வாதிட விரும்பவில்லை. தன் மகளுடன் சண்டையிடும் மனிதன் ஆண் அல்ல. உனக்கு மூன்று வயது இருக்கும் போது நான் பாட்டிலை தூக்கி எறிய முயன்று ஐந்து நாட்கள் பட்டினி கிடந்தேன் என்று சொன்னாய். உங்களுடன் வாக்குவாதத்தில் வெற்றி பெறலாம். நீங்கள் வெற்றி பெறுவதற்காக நான் உங்களிடம் சரண் அடைகிறேன். இனி உன் வாழ்க்கையில் நான் இருக்க மாட்டேன். நீ நன்றாக படித்து வலுவாக வளர வாழ்த்துகிறேன் மகளை என உருக்கமாக வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

 

View this post on Instagram

 

A post shared by Filmactor Bala (@actorbala)

author avatar
Priya Ram