பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜி வி பிரகாஷும், சைந்தவியும் பள்ளிக் காலம் முதலே நண்பர்கள். ஜி வி இசையமைப்பாளராக ஆனதும் சைந்தவிக்கு அதிக பாடல்களைக் கொடுத்தார்.
இதனால் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்கள் மண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதையடுத்து ஜி வி பிரகாஷ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு ஒரு நடிகையோடு ஏற்பட்ட தொடர்புதான் அவரது திருமண வாழக்கை முடிவுக்கு வரக் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் ஜி வி மீதான இந்த அவதூறுகளுக்கு சைந்தவி மறுப்பு தெரிவித்துள்ளார். தங்கள் விவாகரத்துக்கு எந்தவொரு வெளிநபரும் காரணமில்லை என்றும், தங்கள் இருவரும் மனமுவந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தங்களுக்கு இடையிலான நட்பும் மரியாதையும் தொடரும் என தெரிவித்திருந்தார்.
இருவரின் பிரிவுக்கு ஜி வி பிரகாஷ் தன்னுடன் நடித்த ஒரு நடிகையோடு நெருக்கமாக இருப்பதுதான் காரணம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் சினிமாவில் நடிகரானது குறித்து அதிருப்திகரமான பதிலையே முன்பு சைந்தவி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “ஜிவி பிரகாஷ் நடிகராக ஆசைப்படுவதாக சொன்னபோது எனக்கு அதில் உடன்பாடில்லை. ஆனால் அவர் ஆசைப்பட்டதால் சில நிபந்தனைகளோடு நான் அவரை நடிக்க சொன்னேன். நான் சொன்ன எந்த கண்டீஷனையும் அவர் பின்பற்றவில்லை.
அவர் காதல் காட்சிகளில் நடிகைகளோடு நெருக்கமாக நடிக்கும் போது கஷ்டமாக இருக்கும். ஆனால் அதன் பின்னர்தான் நடிப்பில் இதுவும் ஒரு அங்கம் என்று. திருமணமான எல்லா நடிகர்களின் மனைவிகளுக்கும் இப்படிதானே இருக்கும் என்று” எனப் பேசியுள்ளார். இந்த கருத்திலேயே ஜிவி நடிகைகளோடு நெருக்கமாக நடிப்பதை சைந்தவி விரும்பவில்லை என்பது தெளிவாகிவிடுகிறது.