என்னது… நோ-DJ சொன்ன பாபத்தே இப்போ… DJ பாட்டுக்கு குத்தாட்டம் போடுறாரா?… சோஷியல் மீடியாவை அதிர வைத்த… வைரல் வீடியோ…!!

By Swetha on புரட்டாதி 6, 2026

Spread the love

பூனேவில் கணபதி ஊர்வலங்களின் போது DJ இசைக்கருவிகள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர் வித்யானந்த் பாபத், DJ இசையின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுவது போல் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஒலி மாசுபாட்டிற்கு எதிரான இவரது தீவிரப் போராட்டத்தைக் கேலி செய்யும் விதமாக இந்த போலி வீடியோ உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், பண்டிகைக் காலங்களில் ஒலி பெருக்கிகள் எழுப்பும் உரத்த இசைக்கு எதிர்ப்பைப் பதிவு செய்யும் பாபட், திடீரென மனமாற்றம் அடைந்து அந்த DJ இசைக்கேற்ப உற்சாகமாக நடனமாடுவது போல AI தொழில்நுட்பம் மூலம் சித்திரிக்கப்பட்டுள்ளது. பண்டிகை ஊர்வலங்களில் DJ கலாச்சாரத்தை ஆதரிப்பவர்கள், இவரை நையாண்டி செய்வதற்காகவே இந்த போலி வீடியோவை சமூக வலைதளங்களில் தயாரித்துப் பகிர்ந்து வருகின்றனர்.

   

இருப்பினும், இந்த AI போலி வீடியோக்கள் தனது லட்சியத்தைக் குறைக்காது எனத் தெரிவித்துள்ள வித்யானந்த் பாபத் , பண்டிகைகளின் போது அளவுக்கு அதிகமான ஒலி மாசுபாட்டால் முதியவர்களும் நோயாளிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். பாரம்பரியக் கலாச்சார முறைகளில் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டுமே தவிர, விதிமுறைகளை மீறி உரத்த DJ இசையைப் பரப்புவதற்கு எதிராகத் தனது சட்டப் போராட்டமும் விழிப்புணர்வுப் பணிகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.