இன்ஸ்டாகிராம் மூலமாக ஆகஸ்ட் 2026-இல் ரூ 20 லட்சம் வருமானம் ஈட்டிய டிஜிட்டல் கொன்டென்ட் கிரியேட்டரான தியாஷா கோஸ்வாமி, தனது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் மற்றும் அவர்களின் பார்வைகள் தொடர்ந்து குறைந்து வருவதால் மனவேதனை அடைந்து ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை வெளியிட்டுள்ளார். தான் சிறு வயதிலேயே தொழில் தொடங்கி பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், சமூக வலைதளங்களில் தனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தேக்கநிலை மிகுந்த கவலையைத் தருவதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் சுமார் 1 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டிருந்த அவர், இந்த ஆண்டிற்குள் 2 லட்சம் ஃபாலோயர்களை அடைய வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்திருந்தார். இருப்பினும், தற்போதும் 1.09 லட்சம் ஃபாலோயர்களுடன் மட்டுமே இருப்பதுடன், இருப்பவர்களும் தொடர்ச்சியாக அன்ஃபாலோ செய்து வருவதாகக் கூறியுள்ளார். இதோடு, கொல்கத்தாவிலிருந்து மும்பைக்குக் குடிபெயர வேண்டும் என்ற தனது முக்கியக் கனவும் நிறைவேறாமல் போனது குறித்து அவர் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/reel/Dc1d2SwTYcu/?utm_source=ig_web_button_share_sheet
“தயவுசெய்து என்னை யாரும் அன்ஃபாலோ செய்யாதீர்கள், எனக்கு நிறைவேற்ற வேண்டிய கனவுகள் பல உள்ளன” எனக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்த அவர், அதே வேளையில் தனது பார்வையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் பேசியுள்ளார். தன் இலக்குகளை அடைய முடியாவிட்டாலும் யாரும் நம்பிக்கையை இழக்கக் கூடாது எனக் கூறியுள்ள அவரது இந்த வீடியோ, இணையவாசிகளின் கவனத்தைப் பெற்று பலரின் ஆதரவையும் ஆறுதலையும் பெற்று வருகிறது.
