ஹரியானாவில் உள்ள ஒரு முக்கிய சாலையில், மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு பெண், காரின் மேல் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர் தனது ஓலா காரின் ஓட்டுநர் மீது மதுவை ஊற்றி தகராறு செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சாலையில் சென்ற பொதுமக்களும் வழிப்போக்கர்களும் அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்த முயன்றபோது, அவர் அவர்களிடம் அமைதியாகப் பேசுவதற்குப் பதிலாக, ஆங்கிலத்தில் கத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பொது இடத்தில் இதுபோன்ற ஒழுங்கீனமான நடத்தையில் ஈடுபட்ட அந்தப் பெண்ணின் செயலைக் கண்டித்து, இணையவாதிகள் பலரும் தங்களுடைய விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
