ஐயோ… என்னடா கொடுமை இது… போன் உடைந்தா பரவாயில்லை… ரீல்ஸ் தான் முக்கியம்… மெட்ரோவில் நடந்த ஷாக்கிங் சம்பவம்… அதிரடி உத்தரவிட்ட நிர்வாகம்…!!

By Swetha on புரட்டாதி 6, 2026

Spread the love

டெல்லி மெட்ரோ ரயில்களின் ஜன்னல்களில் மொபைல் போன்களை ஒட்டி வைத்து ரீல்ஸ் வீடியோக்கள் படமாக்கப்படுவது அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சமூக வலைதளக் கிரியேட்டர்களுக்கு டெல்லி மெட்ரோ ரயில் கழகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நகரும் ரயிலின் வெளிப்பகுதியில் போனைப் பொருத்தி எடுக்கப்படும் இதுபோன்ற ஆபத்தான படப்பிடிப்புகள் பயணிகள் மற்றும் கிரியேட்டர்களுக்குக் காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு, செல்போன்கள் சேதமடையவும் வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகில் கோச்சார் மற்றும் நந்தினி சுக்லா ஆகிய இணையவாசிகளின் ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிகில் கோச்சார் என்பவரின் வீடியோ 138 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற நிலையில், அவரைப் பின்பற்றி பலரும் இதுபோன்ற வீடியோக்களை எடுக்கத் தொடங்கினர். சமூக வலைதளங்களில் கூடுதல் கவனத்தைப் பெறுவதற்காகப் பொதுப் போக்குவரத்தை ஆபத்தான முறையில் பயன்படுத்துவது குறித்து மெட்ரோ நிர்வாகம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

   

https://www.instagram.com/reel/DctY3lmp7tg/?utm_source=ig_web_button_share_sheet

   

மெட்ரோ வளாகத்திலோ அல்லது நகரும் ரயில்களிலோ பயணிகள் மற்றும் பிறரின் பாதுகாப்பிற்குப் பங்கம்பாவிக்கும் வகையில் இதுபோன்ற வீடியோக்களைப் படமாக்கக் கூடாது என்றும், இந்த எச்சரிக்கையை மீறி செயல்படும் கிரியேட்டர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் DMRC திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது சக பயணிகளின் சௌகரியத்திற்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.