மும்பையின் பாந்த்ரா வெஸ்ட் பகுதியில், எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற 20 வயதான உணவு டெலிவரி ஊழியர் சுபம் பிரஜாபதி, அதிவேகமாக வந்த ஆடம்பர எஸ்.யு.வி கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு பாந்த்ரா ரீக்ளமேஷன் பகுதியில் டெலிவரிக்குச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில், சுபத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்டு பாபா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார்.
காரை ஓட்டி வந்த தெற்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனான யுவராஜ் பஹேட்டி (28) என்பவரை பாந்த்ரா போலீசார் கைது செய்தனர். அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் வாகனத்தை ஓட்டியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
