புதுடெல்லியில் விமான நிலையத்திலிருந்து கர்த்தவ்யபாதை வரை சென்ற பயணி ஒருவர், பயணக் கட்டணத்தில் ரூபாய் 40 குறைவாகக் கொடுத்துவிட்டு ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கட்டணத்தைக் கேட்ட ஓட்டுநரிடம் “என்னால் மீதிப் பணத்தைத் தர முடியாது, உன்னால் முடிந்தது பார்த்துக்கொள்” என்று அந்தப் பெண் அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த ஓட்டுநர், அந்தப் பெண்ணின் வாடிக்கையாளர் கணக்கைக் குறிப்பிட்டு, “யாரும் இவருக்கு இனிமேல் கேப் புக்கிங் எடுக்க வேண்டாம்; இவர் பணமும் தருவதில்லை, மரியாதையும் இல்லாமல் பேசுகிறார்” என்று தன் சக ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
அதற்கு அந்தப் பெண் சிறிதும் தயங்காமல், “ஆமாம், எல்லாரிடமும் போய் சொல்… இங்கிருந்து முதலில் கிளம்பு” என்று கோபத்துடன் கத்தி ஓட்டுநரை விரட்டியுள்ளார். சிறிய தொகைக்காக ஓட்டுநரிடம் அந்தப் பெண் நடந்துகொண்ட விதம் இணையவாசிகளிடையே கடும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.
