உதயநிதி கைது…! “3 மாதங்களுக்கு முன் உழைத்ததற்கு இதுதான் பலனா…? திமுக தொண்டர்கள் மத்தியில் வெடித்த அதிருப்தி…!!

By Devi Ramu on ஆவணி 4, 2026

Spread the love

தஞ்சாவூர் பேச்சைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இருப்பினும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உதயநிதி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றிபெறச் செய்த கூட்டணி தோழமைகளான விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இக்கைது குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றன. ஆளுங்கட்சியான தவெகவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்ட பிறகு, இக்கட்சிகள் மெளனம் சாதிப்பது திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் நடைபெறும் கண்டனப் போராட்டங்களில் திமுகவின் கொடிகள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்று வரும் சூழலில், கூட்டணித் தலைவர்கள் எவரும் குரல் கொடுக்காதது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. “இவர்களுக்காகவா மூன்று மாதங்களுக்கு முன்பாகத் தீவிரமாக உழைத்தோம்?” எனக் கேள்வி எழுப்பும் திமுக தொண்டர்கள், தோழமைக் கட்சிகளின் இந்த மௌனப் போக்கிற்குத் தங்கள் பலத்த அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.