ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் பல்வேறு வகையான செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர், இந்தத் தொழில்நுட்பங்கள் பெருமளவிலான தரவுகளை விரைவாக ஆய்வு செய்யவும், இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறியவும் உதவுகின்றன என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இறுதி முடிவுகளை எடுப்பதில் மனிதர்களே முதன்மையாகச் செயல்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். எலான் மஸ்க்கின் ‘க்ரோக்’ (Grok) போன்ற அமைப்புகள் இதற்குப் பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போரில் செயற்கை நுண்ணறிவை தடையின்றிப் பயன்படுத்துவது, மற்ற நாடுகளின் இறையாண்மையைப் பாதிப்பதோடு, எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனச் சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின் எச்சரித்துள்ளார். மேலும், இது போன்று போர் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அல்காரிதம்களிடம் (Algorithms) ஒப்படைப்பது, ஹாலிவுட் திரைப்படமான ‘டெர்மினேட்டர்’ (Terminator)-இல் காட்டப்படுவது போன்ற ஒரு பேரழிவு காலத்திற்கு (Dystopia) உலகைத் தள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், அலி கமேனியின் மரணத்திற்குப் பிறகு ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கப்போவதாக எச்சரித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கப்போவதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. AI தொழில்நுட்பம் ஒருபுறம் போரின் வேகத்தை அதிகரித்துள்ள நிலையில், அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்த கவலைகள் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…