சொக்கத்தங்கம் திரைப்படத்தில் நடிகர்களின் பெயர்களில் இருந்த ஒற்றுமை தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது .
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். பல போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவில் அறிமுகமான இவர் முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். 1979 ஆம் ஆண்டு அகல்விளக்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அதிலும் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது.

பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்த இவரை அனைவரும் கேப்டன் என்று அழைக்க தொடங்கினார்கள், சினிமாவில் மாஸ் ஹீரோவாக நடித்த அசத்தி வந்த விஜயகாந்த் பின்னர் அரசியலிலும் நுழைந்தார். தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய பிறகு சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகிக் கொண்ட இவர் தனது அரசியல் வாழ்க்கையிலும் சாதித்து காட்டினார்.
தமிழ் சினிமாவில் தன்னைப் போலவே சினிமாவில் நடிக்கும் அனைவரும் உணவு சாப்பிட வேண்டும் என்று எண்ணியவர். அனைவரையும் சமமாக பார்த்த ஒரு நடிகர். இவரின் புகழை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் . இவரின் உயிரிழப்பு தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது இவரின் படம் தொடர்பான ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சொக்கத்தங்கம். இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியவர் பாக்கியராஜ். ஜி.வி நிறுவனம் சார்பாக ஜி. வெங்கடேஷ் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். மேலும் இப்படத்தின் பாடலை தேவா இசையமைத்தார். விஜயகாந்த்க்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார்.
மேலும் பிரகாஷ், கவுண்டமணி, செந்தில், உமா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்தவர்கள் அனைவருமே தங்களுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்திருந்தார்கள்.

இந்த படத்தில் இயக்குனர் கே பாக்யராஜ் ஒரு ஒற்றுமையை கொடுத்திருக்கின்றார். அதாவது இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்தின் பெயர் முத்து ,அவரது தங்கையாக நடித்தவர் உமா அவரது பெயர் மரகதம், அதைத்தொடர்ந்து அவருக்கு ஜோடியாக நடித்த சௌந்தர்யாவின் பெயர் பவளம். மேலும் நடிகர் விஜயகாந்தின் தந்தை பெயர் மாணிக்கம் என குறிப்பிட்டு இருப்பார்கள். இப்படி நவரத்தினங்களின் பெயர்களை வைத்து படத்தை இயக்கியிருப்பார் கே பாக்யராஜ்.
