தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி 1130 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் என்பது தெரிய வந்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண். இதுவரை 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கூட அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கு சென்றிருக்கும் ராம்சரண் தற்போது கேம் சேஞ்சர் திரைப்படத்தின் மூலமாகவும் மிகப்பெரிய புகழை எட்ட இருக்கின்றார். ராம்சரனின் சொத்து மதிப்புக்கு போட்டியாக அவரது மனைவி உபாசனின் சொத்து மதிப்பும் இருப்பது மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ராம்சரண் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஃப்ரீஸ் செய்து வைக்கப்பட்ட கருமுட்டையை பயன்படுத்தி இவர் ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் சொத்துக்களை எல்லாம் சேர்க்காமல் நடிகர் ராம்சரண் மற்றும் அவரது மனைவியின் சொத்துக்களை சேர்த்தாலே 2500 கோடி தேறும் என்று கூறி வருகிறார்கள். நடிகர் ராம்சரண் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் 45 கோடி சம்பளம் வாங்கினார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குகின்றார். அடுத்தடுத்த திரைப்படத்திற்கு 120 மற்றும் 150 கோடி வரை சம்பளம் வாங்கப் போகிறார் என்பது தெரிய வந்தது. இப்படி இருக்கையில் அவரிடம் எப்படி 2500 கோடி சொத்து இருக்கும் என பலரும் கேட்பார்கள். அதற்கு காரணம் அவரது மனைவி தான். அவர் யார் என்ன வேலை செய்கிறார் என்பதை பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.

ராம்சரணியின் மனைவி பெயர் உபாசனா காமினேனி . அப்போலோ மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி ஆவார். அது மட்டுமில்லாமல் இந்திய பன்னாட்டு சுகாதாரக் குழு செயல் துணைத்தலைவரான ஷோபனா காமினியின் மகள் ஆவார். அப்போலோ மருத்துவமனையின் மூன்றாம் தலைமுறை வாரிசாக உபாசனா துணை தலைவராக பதவி ஏற்று வருகின்றார்.
ட்யூரட்டட் உள்ளடக்கம் மற்றும் சேவைகளை வழங்கும் ஆரோக்கிய தளமான யூஆர் லைஃப் இன் நிறுவனரும் இவர் ஆவார். 2023 ஆம் ஆண்டின் பணக்கார இந்தியர்களில் அதாவது போர்ப்ஸ் அறிக்கைப்படி அப்பல்லோ மருத்துவமனைகள் சுமார் ரூபாய் 77 ஆயிரம் கோடி சொத்துக்களை கொண்டுள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. அப்போலோ சாரிட்டியின் வைஸ் சேர்மனாகவும் இருந்து வரும் இவர் 1130 கோடி ரூபாய் சொத்துக்கு தனி சொந்தக்காரர் ஆவார்.

#image_title
மேலும் ஹைதராபாத்தில் இந்த தம்பதிகளுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பிருக்கும் 25 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்ட வீட்டில் தான் இந்த தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடம் ரோல்ஸ் ராயல்ஸ் பேண்டன் என்னும் கார், 4 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் மேபேக் சொகுசுக்கார், ஃபெராரி போர்ட்டோபீனா என்று பல கோடி மதிப்புள்ள கார்கள் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் தனியாக பிரைவேட் ஜெட் ஒன்றும் ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
