10 லட்சம் வேண்டுமா..? கஷ்டப்பட்டு உழைக்க வேண்டா, இத மட்டும் பண்ணா போதும்.. நடிகை கஸ்தூரி வெளியிட்ட சர்ச்சை பதிவு..!

By Mahalakshmi on ஜூன் 22, 2024

Spread the love

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பாக 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் நிலையில் அது குறித்து பேசி இருக்கின்றார் பிரபல நடிகை கஸ்தூரி.

தமிழ்நாட்டையே தற்போது உலுக்கி வரும் சம்பவம் என்றால் அது கள்ளக்குறிச்சி கருணாபுரம் சம்பவம் தான். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் இருக்கும் பலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை 54 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சிலர் உடல் நிலை என்னும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

   

   

இந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி பகுதியில் பணியாற்றி வந்த சில அரசு அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து இருக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கும் அங்கு பணியாற்றி வந்த அரசு ஊழியர்களுக்கும் எதிராக திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது குரல்களை கொடுத்து வருகிறார்கள். கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. அதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக இயக்குனர் பார்த்திபன் கூறியிருந்ததாவது கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மக்களின் வரிப்பணத்தில் இருந்து சுமார் 5 கோடி ரூபாயை இப்படி கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களுக்கு கொடுக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

மேலும் நடிகர் விஜய், நடிகர் சூர்யா, விஷால் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். மேலும் தமிழக அரசுக்கு பல கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இது குறித்து பேசியபோது பல விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இப்படி தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கள்ளச்சாராய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

தொடர்ந்து பலி  எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில் பிரபல நடிகையான கஸ்தூரி வெளியிட்டு இருந்த பதிவில் சிவகாசி விருதுநகர் போன்ற பட்டாசு ஆலைகளில் உழைத்து குடும்பத்தை காப்பாற்ற போராடும் பல அப்பா, அம்மாக்கள், அண்ணன், தம்பிகள் வெடி விபத்து ஏற்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கின்றது.

தற்போது கள்ளச்சாராயம் சாப்பிட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அது விளையாட்டு வீரர்களுக்கா? அல்லது போரில் உயிர்நீத்தவர்களுக்காக? விஞ்ஞானிகளுக்கா? விவசாயிகளுக்கா? இல்லை, குடும்பத்தை கைவிட்டு கள்ளச்சாராயத்தை குடித்து செத்தவருக்காக? இந்த கேடுகெட்ட திராவிட மாடலில் 10 லட்சம் சம்பாதிக்க உண்மையாக உழைக்கத் தேவையில்லை. மொடா குடிகாரனாக இருந்தாக போதும் என்று கடுமையாக விமர்சனத்தை முன் வைத்திருக்கின்றார்.