விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா வெற்றிகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் கௌதம், சிம்பு, ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் உருவானது ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம். திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், நல்ல வசூலையும் வாரி குவித்துக் கொண்டிருக்கிறது.

நடிகர் சிம்புவின் ரசிகர்கள் இப்படத்தை பெருமளவில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் பட வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. வெந்து தணிந்தது காடு திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 15 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இரண்டாம் நாள் முடிவில் ரூபாய் 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வார இறுதி நாட்களில் படத்திற்கு நல்ல கூட்டம் வரலாம். படத்தின் வசூலும் உயரும் என்று கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர். மொத்தத்தில் ‘வெந்து தணிந்தது காடு…வசூலில் நல்ல லாபத்தை போடு’…

