நடிகர் விஜயகாந்த்துக்கு கோட் போட்டு விடும் அவர் மனைவி பிரேமலதா…. என்ன ஒரு ரொமான்ஸ்…. வைரலாகும் UNSEEN புகைப்படம்…

By Begam on புரட்டாதி 17, 2022

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். சினிமாவுக்காக இவர் செய்த விஷயங்களை இதுவரை எந்த நடிகரும் செய்யவில்லை என்றே கூறலாம். தனது சிறு வயதிலேயே சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ‘விஜயராஜ்’ என்ற தன் பெயரை விஜயகாந்த் என்று மாற்றினார். ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலமானார்.

   

வைதேகி காத்திருந்தாள், நூறாவது நாள், வேங்கையின் மைந்தன், சபாஷ் என்று இவர் நடித்து வெற்றி படங்கள்  ஏராளம். ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான  ஃபிலிம் பார் விருதை பெற்றார். நடிகர் விஜயகாந்த் ‘தமிழை தவிர வேற எந்த மொழிகளிலும் நடிக்க மாட்டேன்’ என்று கூறியதை கடைசி வரை காப்பாற்றினார். அவர் நடித்த 150க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்று கூட பிற மொழி கிடையாது.

   

 

பின்பு அரசியலில் களம் இறங்கிய விஜயகாந்த் முழு கவனமும் அரசியலில் செலுத்த படங்களில் நடிப்பதை  நிறுத்திவிட்டார். தற்பொழுது உடல்நிலை சரியில்லாமல் போக  மருத்துவ கவனத்தில் இருக்கிறார். விரைவில் மீண்டும் நலம் பெற்று வருவார் என்று விஜயகாந்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். தற்பொழுது இளம் வயதில்  அவருடைய மனைவி பிரேமலதா கோட் போட்டுவிடும் அழகான ரொமான்ஸ் புகைப்படம் ஒன்று  இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்….