போலீஸ் கெட்டப்பில் அசத்தும் நடிகை வனிதா…….அடுத்த படமா….வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்….

By Begam

Published on:

நடிகர் விஜய் உடன் ‘சந்திரலேகா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகளாவார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கோலிவுட்டில் பெரிதாக பிரபலமாகவில்லை .பின்னர் அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

   

முதல் கணவரை பிரிந்த அவர்,  அவரது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். பின்னர் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் youtube சேனல் ஒன்றை தொடங்கினார்.

அந்த சேனல் தொடங்க உதவியாக இருந்த  பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வனிதா தற்பொழுது பீட்டர் பாலை விட்டும் பிரிந்து வந்து விட்டார்.  இவர் எது பேசினாலும் செய்தாலும் சர்ச்சையாகிவிடுகிறது. இதற்கு காரணம் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும், இவரது கோபம் மிகுந்த இயல்பான குணமும்  தான்.

தன்னுடைய இல்லற வாழ்க்கை எப்படி இருந்தாலும் தனது மகள்களை தனது சொந்த காலில் நின்று பார்த்துக் கொண்டு, தனியாக வாழ்ந்து வருகிறார். தற்பொழுது சில படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவர் போலீஸ் உடை அணிந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த உடையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.