நம்ம சிம்ரனா இது ?…இளம் நடிகைகளே தோத்து போயிடுவாங்க போலயே….வைரலாகும் புகைப்படம்…..

By Begam on புரட்டாதி 17, 2022

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், பிரபுதேவா என பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 90 களில் நடிகை சிம்ரன் மிக அதிகமான ரசிகர்களை கொண்ட கதாநாயகியாக வலம் வந்தவர். இவர்  ‘இடுப்பழகி சிம்ரன்’ என்று தனது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

   

தமிழ் சினிமா தாண்டி தென் இந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நடிகை சிம்ரன் புது முகங்கள் வருகையாலும், வயது காரணமாலும் புறக்கணிக்கப்பட்டார்.பிலிம் பார் விருது ,சிறந்த நடிகைக்கான விருது என இவர் வாங்கிய விருதுகள் ஏராளம்.

   

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த’ சீமராஜா’ படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரன், அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் நடித்த ‘பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த இவர் தற்பொழுது மீண்டும் தனது இளமையை மீட்டு தற்போதைய இளம் நடிகைகளே தோற்று போகும் அளவிற்கு மிக அழகாக மாறி உள்ளார்.

 

தற்பொழுது மீண்டும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். தற்போது அவர் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்த அவர், அதில் ‘டேக் இட் ஈசி’ என்று பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.