நடிகை மீனாவின் இத்தனை அழகுக்கு காரணமான அவரது அம்மாவை பார்த்திருக்கீங்களா?….. இதோ பாருங்கள்…

By Begam on புரட்டாதி 18, 2022

Spread the love

நடிகை மீனா தனது அம்மாவுடன் இணைந்து எடுத்த அழகான புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையதளங்களில் திடீரென வெளியாகி வைரலாகி வருகிறது.

திரை உலகில் ‘அன்புடன் ரஜினிகாந்த்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. அதன் பின் கதாநாயகியாக பல முன்னணி ஹீரோக்களுடன் வலம் வந்தார். தமிழில் இவர் ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

   

   

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் சிலர் கதாநாயகிகளாக தொடர்ந்து  நீடிப்பதில்லை .ஆனால் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை மீனா.  நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை 2009இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். மகள் தனது அம்மாவை போன்று குழந்தை நட்சத்திரமாக விஜயுடன் இணைந்து ‘தெறி’ படத்தில் நடித்துள்ளார்.

 

தனது முதல் படத்திலிலேயே  தன்னுடைய மழலை பேச்சால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அண்மையில் அதாவது கடந்த ஜூன் 28ம் தேதி அவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் நோய் தொற்றால் உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை மீனாவின் பிறந்த நாள். கணவர் இறப்பிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் மீனாவிற்கு சக தோழிகள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்கள்.

இந்த சமயத்தில் நடிகை மீனா தனது அம்மாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று திடீரென்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்…..