காலையிலேயே பரபரப்பு… 2026ல் தவெக கூட்டணி… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி களத்தில் இறங்கிய பிறகு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க விஜய் கூட்டணி தொடர்பான அறிவிப்பை இதுவரை வெளியிடாமல் உள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, SIR படிவங்களில் பெயர் விடுபட்டவர் பெயர்களை சேர்ப்பது குறித்து வீடு வீடாகச் சென்று பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்காகவும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் நாமக்கல் வந்துள்ளேன். சேலத்தில் நடைபெற இருந்த மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் நடைபெற முடியாமல் போய்விட்டது. கட்சித் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்.

கூட்டணி குறித்து முடிவு செய்ய கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் குழு அமைக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான குழு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழக வெற்றி கழக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது. அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பார். எங்கள் தலைவரை முதலமைச்சராக இருக்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. திமுக மற்றும் பாஜகவை தவிர எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்க யார் கூட்டணிக்கு வந்தாலும் அரவணைத்துக் கொள்வோம் என்று அருண் ராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக வெற்றி கழகம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.

Nanthini

Recent Posts

டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…

6 minutes ago

மேடையிலேயே கதறி அழுத ஜெனிலியா… கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிப்போன ரசிகர்கள்…!

சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…

11 minutes ago

உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…

14 minutes ago

நிமிஷத்தில் மாறிய காட்சி… “ஈரான் காலி!” – டிரம்ப் வெளியிட்ட அதிரடி பதிவு… அடுத்த நொடியே பதறிப்போன உலக நாடுகள்…!

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…

19 minutes ago

“அம்மா எப்போ வருவாங்க?” – 4 வயது மகள் கேட்ட கேள்வி.. குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் தாய்க்கு நேர்ந்த சோகம்…!

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…

25 minutes ago

கடலில் நடுவே நடந்த பயங்கரம்… இந்தியா வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்கள்…. அடுத்த பரபரப்பு…!

ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…

29 minutes ago