“காட்டுலே ஆபத்தான மிருகம் ஓநாய் தான்”.. தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது..

By Mahalakshmi on ஜூலை 16, 2024

Spread the love

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். சினிமாவில் ஒரு ஹீரோவாக அறிமுகமாகி தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக தன்னை மெருகேற்றி இருக்கின்றார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வரை சென்று கலக்கி இருக்கும் இவர் தற்போது ஏகப்பட்ட திரைப்படங்களை தனது கையில் வைத்திருக்கின்றார்.

   

   

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து தற்போது அவரின் 50வது திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ராயன் என பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கின்றார்.

 

இந்த திரைப்படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருக்கின்றது, இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன், துஷாரா எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். நடிகராக அசத்தி வந்த தனுஷ் தற்போது இயக்குனராகவும் இரண்டு திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். அதில் ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.

ஒரு பக்கம் இயக்கம் மற்றொரு பக்கம் நடிப்பு என்று பிஸியாக இருந்து வருகின்றார் தனுஷ். இந்நிலையில் ராயன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது தனுஷின் அண்ணன் செல்வராகவன் ” காட்டிலேயே மிக ஆபத்தான மிருகம் எதுன்னு தெரியுமா?” என்ற டயலாக் உடன் ஆரம்பிக்கின்றார். மேலும் படத்தில் வரும் வசனங்கள் மற்றும் நடிகர்களின் நடிப்பு தற்போது வைரலாகி வருகின்றது. இந்த ட்ரெய்லர் இதோ..