தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவர் விஜயின் லியோ படத்தில் வில்லனாக நடித்தார். இப்போது அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சமீபத்தில் தம்பி ராமையா அளித்த பேட்டியில் கூறியதாவது, அவங்க வீட்டுக்கு என் பையன் மகனா போய் இருக்கான். அந்த பொண்ணு என் வீட்டுக்கு மகளா வந்து இருக்கு. ரொம்ப matured ஆன பாப்பா. என் மருமகள் கிட்ட எனக்கு அந்த விஷயம் ரொம்ப பிடிக்கும். இப்போ நானே ஆர்வக்கோளாறுல ஏதாவது ஒரு விஷயத்தை பத்தி பேச போறேன்னா நான் என்ன பேச போறேன்னு அவங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.
ஆனாலும் நான் என்ன சொல்ல வரேன்னு பொறுமையா கேட்பாங்க. ஒண்ணுமே தெரியாத மாதிரி அந்த பாப்பா உக்காந்திருக்கும். நான் பேசி முடிச்சதுக்கு அப்புறம் தான் ஓஹோ ஏற்கனவே இந்த விஷயம் தெரியும் போல அப்படின்னு நினைப்பேன். ரொம்ப matured ஆன பொண்ணு. நம்மள விட ஏஜ்ல அதிகம். ஏதோ சொல்ல வராரு. அவர் என்ன சொல்றாருன்னு கேட்போம் அப்படிங்கற மாதிரி இருப்பாங்க. ரொம்ப ஆன்மீகம் சார்ந்த பெண்.
பரதநாட்டியம், பிட்னஸ் இது எல்லாவற்றிலும் ரொம்ப கவனமா இருப்பாங்க. ஒரு பெண்ணுக்கு அதுதானே வேணும். நான் கடவுள் கிட்ட சிந்திக்கும் சிந்தனை எல்லாம் நல்ல சிந்தனையாக, சந்திக்கும் மனிதர் எல்லாம் நல்ல மனிதராக, கடக்கும் ஒவ்வொரு முடியும் நல்ல பொழுதாக அமைத்துக் கொடு இறைவா அப்படின்னு வேண்டினேன். கடவுள் எனக்கு நல்ல மருமகளை கொடுத்திருக்காரு என தம்பி ராமையா ஓப்பனாக பேசியுள்ளார்.