“ரூ.2000 கொடுங்க அம்மா”… பணம் கொடுக்க மறுத்த தாய்… மகன் எடுத்த விபரீதம் முடிவு… பொறியியல் மாணவனின் கனவு துப்பட்டாவால் முடிந்த சோகம்… பீகாரில் பயங்கர சம்பவம்..!!!

Spread the love

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பஸ்தியில், வெறும் 2,000 ரூபாய் பணத்திற்காகப் பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்கிசராய் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த 30 வயதான குமார் கௌரவ், தனது தாயிடம் 2,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார். முந்தைய நாள் தான் பணம் கொடுத்ததாகக் கூறி தாய் மறுக்கவே, ஆத்திரமடைந்த மாணவர் வீட்டின் நான்காவது மாடிக்குச் சென்று தனது சகோதரியின் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தாமதமாகியும் மகன் கீழே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குமார் கௌரவ் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தற்கொலைக்கு முன்பாக தனது பிடிவாதத்தை வெளிப்படுத்தும் விதமாக, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை உதைத்துத் தள்ளிவிட்டு மாணவர் மேலே சென்றதாகத் தந்தை யோகேந்திர பிரசாத் சிங் உருக்கத்துடன் தெரிவித்தார். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான யோகேந்திர பிரசாத்தின் மூன்று பிள்ளைகளில் கௌரவ் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆதர்ஷ் ஜமால்பூர் காவல்துறையினர், மாணவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரு ஆசிரியையின் மகனாகவும், படித்த பொறியியல் மாணவராகவும் இருந்தும், ஒரு சிறிய பணத் தகராறுக்காக இத்தகைய விபரீத முடிவை அவர் எடுத்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

12 seconds ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

9 minutes ago

“அடி மாட்டு ரேட்டுக்கு பேரம்..?!” – வைகோ பேட்டியால் ஆடித்தீர்ந்த தமிழக அரசியல்… விஜய்யை வாரிச்சுருட்டிய திமுக எம்.பி…!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

11 minutes ago

“கண்ணீர் விட்டு கதறிய இளையராஜா..! ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்து… பாக்யராஜுக்கு வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…

20 minutes ago

வியூஸுக்காக யூடியூபர் செய்த மோசமான காரியம்… டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு… போக்சோ சட்டத்தில் கைது…!

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…

22 minutes ago

BREAKING: திமுகவில் இணையும் 2 MLA-க்கள்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…

42 minutes ago