காரில் செல்லும்போதே மகன் யுவன் மடியில் பிரிந்த உயிர்.. இளையராஜா மனைவியின் மரணமும் ஒரு எதிர்பாராத நிகழ்வு தானா..

By Sumathi

Updated on:

இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி நேற்று முன்தினம் கல்லீரல் புற்றுநோயால் காலமானார். இன்று தேனியில் உள்ள அவர்களது சொந்த ஊரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இளையராஜாவின் மனைவி ஜீவாவின் மறைவு குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.

   

இளையராஜாவுக்கு பவதாரணி என்ற மகளும் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்ற 2 மகன்களும் என மொத்தம் 3 பிள்ளைகள். இதுதவிர இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி என அனைவருமே ஒரே குடும்பமாக தான் நீண்டகாலமாக இருந்து வருகின்றனர். இப்போதும் தி. நகரில் உள்ள வீட்டில்தான் அனைவரும் ஒன்றுகூடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இளையராஜாவின் மனைவி ஜீவா இறந்த பிறகு, அந்த குடும்பத்தின் பொறுப்புகளை, பராமரிப்பு மற்றும் குடும்ப நிர்வாகம் ஆகியவற்றை கார்த்திக் ராஜாவின் மனைவி ராஜி பொறுப்பாக கவனித்து வருகிறார். இளையராஜாவுக்கு தேவையான விஷயங்கள், அவருக்கான உணவு என பலவற்றை அவர்தான் தயார் செய்து தருகிறார். குடும்ப உறுப்பினர்கள் சார்ந்த பல விஷயங்களை அவர் கவனித்துக்கொண்டு பராமரிக்கிறார். பவதாரணியின் மறைவு எப்படி இளையராஜா குடும்பத்தினரை கடுமையாக பாதித்ததோ, அதே போல்தான் இளையராஜாவின் மனைவி ஜீவாவின் திடீர் மறைவும் அவர்களை நிலைகுலையச் செய்தது.

அதாவது அப்போது ஐதராபாத்தில், தெலுங்கில் மிக முக்கியமான நடிகர்களின் ஒருவரான மோகன் பாபுவின் படத்துக்கான ரெக்கார்ட்டிங்கில் இளையராஜா இருந்துள்ளார். திடீரென ஜீவாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்போது அம்மாவுடன் இருந்த யுவன் சங்கர் ராஜா, அவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். காரை யுவன் ஓட்டியிருக்கிறார்.

அப்போது செல்லும் வழியில் மிகவும் சிரமப்பட்டு உயிருக்கு போராடிய அவரது அம்மா, சீக்கிரம் போப்பா என்று கூறியபடி யுவன் சங்கர் ராஜா மடியில் மயங்கி விழுந்திருக்கிறார். அடுத்த சில விநாடிகளில் உயிர் பிரிந்திருக்கிறது. இப்படி தாயின் மறைவை நேரில் கண்டு கலங்கிப் போய் கதறி இருக்கிறார் யுவன். அதிக ரத்த அழுத்தம் காரணமாக, இருதய அடைப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கிறார். இப்படி இளையராஜா குடும்பத்தில் அம்மா மறைவு, சகோதரி மறைவு என அவர்கள் மிகவும் வேதனையில் தவிக்கின்றனர்.

Ilaiyaraaja With His Wife Jeeva L Sons Yuvan Shankar and Karthik Raja Standing Daughter Bhavatharini Sitting Front
author avatar
Sumathi