பாடும்போது திடீரென்று தேம்பி அழுத பவதாரணி.. தேற்றி கொடுத்து பாட வைக்கும் இளையராஜா.. காண்போரை கலங்கவைக்கும் வீடியோ..

By Mahalakshmi

Updated on:

திரைப்பட பின்னணி பாடகி மற்றும் இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரணி மறைந்த செய்தி அவரது குடும்பத்தினரையும்; உறவினர்களையும்; திரை பிரபலங்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் பவதாரணியின் நினைவுகள் எல்லாம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

   

இந்த வகையில் பவதாரணி மற்றும்  அப்பா இளையராஜாவுடன் இணைந்து சிறுவயதில் இசை கச்சேரியில் பாடியுள்ள வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதில் இளையராஜா இசையமைப்பில் ராமர் பாடல் ஒன்றை  பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று பயத்தாலோ அல்லது பாடல் வரிகளின் தாக்கத்தினாலோ  பவதாரணி ஆழ  தொடங்கி விட்டாள்.

இதனை, பக்கத்திலிருந்து பார்த்த இளையராஜா தனது மகளின் முதுகில் தேய்த்து ஆறுதல் கூறி பாடச் சொன்னார். மேலும் பவதாரணி தயங்கிய நிலையில் இருந்ததை கண்ட இளையராஜா தானும் சேர்ந்து பாடி பவதாரணிக்கு ஊக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இதை பார்ப்பவர் நெஞ்சங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Mahalakshmi