அசோக் செல்வனிடம் ஜெயித்தாரா RJ பாலாஜி .. ‘சிங்கப்பூர் சலூன் & ப்ளூ ஸ்டார்’ படங்களின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

By Mahalakshmi

Published on:

அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக எவ்வளவு பெற்றுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தைப்பூசம், குடியரசு தினம், சனி மற்றும் ஞாயிறுகிழமை என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் வசூலை பெறலாம் என்ற யுகத்தில் நேற்று இந்த திரைபடங்கள் வெளியிடப்பட்டது.

   

சிங்கப்பூர் சலூன் படத்தின் ரிலீஸ்  தேதி பலமுறை தள்ளிப்போன நிலையில் நேற்று சொன்னபடி வெளியாகிவிட்டது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார். காமெடி மற்றும் எமோஷன் கலந்த இந்த படம் ஓரளவு கலவையான விமர்சனங்களை தான் பெற்று உள்ளது.

அதாவது முதல் நாளில் ஒரு கோடி வசூலை சிங்கப்பூர் சலூன் படம் பெற்று இருக்கிறது. அதேபோல் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோரின் நடிப்பில் ப்ளூ ஸ்டார் படம் வெளியாகி இருந்தது. கிரிக்கெட்டில் ஜாதிய அரசியல் பேசும் படமாக எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான படத்திற்கு இப்போது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனாலும் முதல் நாளில் ப்ளூ ஸ்டார் படம் 80 லட்சம்  மட்டும் தான் வசூல் செய்திருந்தது.

மேலும் சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்கள் முதல் நாளில் வசூல் குறைவதற்கான காரணம் இப்போது திரையரங்குகளில் தனுஷ் நடிப்பில் வெளியான “கேப்டன் மில்லர்” மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “அயலான்” திரைப்படமும் திரையரங்குகளில்  ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ப்ளூ ஸ்டார் படத்திற்கு கிடைக்கும் விமர்சனத்தால் அடுத்தடுத்த நாட்களில் அதிக வசூலை குவிக்க வாய்ப்பு இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

author avatar
Mahalakshmi