கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஓடும் பேருந்தில் நிலை தடுமாறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூவத்தூர் பகுதியை சேர்ந்த 74 வயதான நளினி என்ற பெண் செவ்வல்லூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே நேற்றைய இவர் தன்னுடைய நிறுவனத்திற்கு செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார்.
அப்போது உட்கார இடம் தேடிய போது டிக்கெட் வாங்கிவிட்டு நிலை தடுமாறி முன்பக்கம் வழியாக சாலையில் விழுந்தார். ஓடும் பேருந்தில் சாலையில் விழுந்த நளினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தில் நின்று கொண்டு பயணித்த வயதான பெண்மணி நிலை தடுமாறி சாலையில் விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
