தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மது அருந்துபவர்களை தடுக்கும் வகையில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பொது இடங்களில் மது அருந்துதல் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொது இடங்களில் மது அருந்துபவர்களை தடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பொது இடங்களில் மது அருந்துவதால் குறிப்பாக பெண்கள் பல சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை தடுப்பதற்காக அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
