“என்னால முடியல” எக்கச்சக்கமான மோசமான கமெண்ட்ஸ்.. Toxic பட நடிகை எடுத்த திடீர் முடிவு…!!

By Soundarya on தை 14, 2026

Spread the love

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் டீசர், அதில் இடம்பெற்றுள்ள சில ஆபாசமான மற்றும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் காரணமாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, அந்த டீசரில் நடித்த பீட்ரிஸ் டாஃபென்பாக் என்ற வெளிநாட்டு நடிகையை இணையவாசிகள் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் கண்டுபிடித்த ரசிகர்கள், அங்குச் சென்று மிக மோசமான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர் சைபர் தாக்குதலால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை பீட்ரிஸ், தனது இன்ஸ்டாகிராம் கணக்கையே நீக்கிவிட்டு  சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், இந்தப் போக்கு சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு காட்சியில் நடித்த நடிகையை மட்டும் ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறீர்கள்? அந்தக் காட்சியில் நடித்த படத்தின் நாயகன் யஷ்ஷை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை?” எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய ஒருதலைப்பட்சமான விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை எனச் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.