“உங்களுக்கு ஏன் இந்த வன்மம்?.. அதுக்குள்ளே கலைஞர் படம் நீக்கமா?.. கொதித்தெழுந்த திமுக.. தமிழக அரசு கொடுத்த அதிரடி விளக்கம்”.. !!

Spread the love

சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் மட்டும் தனியாக அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்தப் படம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

இதுகுறித்து திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தனது எக்ஸ் (X) பக்கத்தில் அமைச்சரை நோக்கிக் கடுமையான கேள்விகளை எழுப்பினார். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், பெரியார், பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கும் அரங்கில், கருணாநிதியின் படம் மட்டும் ஏன் அகற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பிய அவர், நூலகத்தைச் சீரமைத்து தேவநேயப் பாவாணர் பெயரைச் சூட்டியதே கலைஞர் கருணாநிதிதான் என்பது அமைச்சர் ராஜ்மோகனுக்கும், அவரது கட்சித் தலைவர் நடிகர் விஜய்க்கும் தெரிய வாய்ப்பில்லை எனச் சாடினார்.

இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுக மாணவர் அணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட நூலகத்திற்கு நேரில் விரைந்து சென்று, அரசுக்கு எதிராகக் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இறுதியாக, இப்புகார்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்க்கும் பிரிவு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட நூலக அலுவலர் அளித்த விளக்கத்தில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அரங்கின் மின்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, பராமரிப்புப் பணிகளுக்காகவே அங்கிருந்த புகைப்படங்கள் தற்காலிகமாகக் கழற்றப்பட்டதாகவும், பணிகள் முடிந்ததும் அவை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். எனவே, இதுகுறித்த தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

“‘ஐஸ் வைக்கிறதுக்கு ஒரு எல்லை இல்லையா?’.. பதவியேற்ற உடனே பக்தி அவதாரம்.. சிவபெருமானாக மாறிய டி.கே.சிவகுமார்.. கர்நாடகாவில் வெடித்த புது அரசியல் புயல்..!!

கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…

9 minutes ago

பாஜக பருப்பு இனி வேகாது.. “6 வருஷத்துக்கு அப்புறம் தான் அண்ணாமலைக்கு புத்தி வந்ததா?”…. கரூரில் ஜோதிமணி சொன்ன ‘பகீர்’ பின்னணி…..!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக அரசியல் சூழல், வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா)…

11 minutes ago

வெறும் ஆரம்பம் தான்… 25 நாட்களில் 18,600 கோடி முதலீடு.. கெத்து காட்டிய முதல்வர் விஜய்….. தமிழகத்தை மாற்றப்போகும் ‘அந்த’ 3 திட்டங்கள் என்ன தெரியுமா…?

தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…

17 minutes ago

“அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி”.. நயினார் நாகேந்திரனிடம் சிக்கிய அந்த ‘ரகசிய’ கடிதம்?… பாஜகவை அதிரவைத்த அந்த ஒரு சீக்ரெட்….!

தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…

23 minutes ago

காலையில் வேலைக்கு வந்த ஐடி ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… இரவோடு இரவாக மூடப்பட்ட கம்பெனி.. 700 பேர் கதி என்ன…?

கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…

26 minutes ago