தைவான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், சுத்தமான குடிநீரை அருந்துவதைப் முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகத் தொடர்ந்து பபிள் டீ மற்றும் அதிகச் சர்க்கரை கலந்த பழச்சாறுகளை மட்டுமே பருகி வந்துள்ளார். இந்நிலையில், அவருக்குத் திடீரெனக் கடுமையான காய்ச்சலும், தாங்க முடியாத அளவிற்கு முதுகின் பக்கவாட்டுப் பகுதியில் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரைச் சோதனை செய்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வலது சிறுநீரகத்திற்குள் 300க்கும் மேற்பட்ட கற்கள் அடர்த்தியாக நிறைந்து காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் சில கற்கள் 2 சென்டிமீட்டர் அளவிற்குப் பெரியதாக, சிறிய கொழுக்கட்டைகளைப் போன்று திரண்டு காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போதிய தண்ணீர் அருந்தாமல் இனிப்பு பானங்களை மட்டுமே பருகியதே இந்த அளவுக்குச் சிறுநீரகக் கற்கள் உருவாக முதன்மைக் காரணம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
