BREAKING: கொந்தளித்த உதயநிதி…. சட்டப்பேரவையில் இருந்து கூண்டோடு வெளியேறிய திமுக…. சற்றுமுன் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

கோவை மாணவர் கொலை சம்பவம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது திமுக சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறி, சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து திமுக கொறடா எ.வ.வேலு சட்டப்பேரவையில் பேசுகையில், தங்களது நியாயமான கேள்விகளுக்கு அரசிடமிருந்து உரிய முறையான பதில் கிடைக்காததால் இந்த வெளிநடப்பு முடிவை மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டினார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவையை விட்டு வெளியேறினர்.