ஜமீன்தார் வீட்டு வாரிசு… பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர்… காமெடி நடிகர் சத்யனின் வியக்க வைக்கும் குடும்ப பின்னணி..!!

By Soundarya on ஆடி 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார் நடிகர் சத்யன். இவருடைய பஞ்ச் டயலாக்குகள், தனித்துவமான நடிப்பு ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இவர் விஜயின் நண்பன் படத்தில் சைலன்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமானார். இவர் ஆரம்பத்தில் ஹீரோவாகவே அறிமுகமானார்.   2000 வருடம் வெளியான இளையவன் என்ற படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடித்தார். அதனை தொடர்ந்து கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனை அடுத்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் அவருடைய பின்னணி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்யன் ஒரு பெரிய ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான மாதம்பட்டி அதனுடைய சமையலுக்கும், உணவு வகைகளுக்கு மட்டும் இன்றி கோடிக்கணக்கான சொத்துகளுக்கு சொந்தக்காரரான மாதம்பட்டி சிவகுமாரின் பூர்வீக பூமியாக பலருக்கு தெரிந்திருக்கும். மாதம்பட்டி சிவகுமாரின் ஒரே மகன் தான் சத்யன். அங்குள்ள இவர்களுடைய பங்களா 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

   

ஒரு காலத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் தோட்டமும், நிலங்களும் இவருக்கு சொந்தமாக இருந்துள்ளது. ஒரு காலத்தில் பெரிய செல்வந்தர்களாக இருந்த மாதம்பட்டி குடும்பம் இன்று தங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று விட்டார்கள். மாதம்பட்டி சிவகுமார் திரைப்பட தயாரிப்பில் ஒரு காலத்தில் ஈடுபட்டு வந்து அதில் தோல்வியை கண்டதால் சொத்துக்களை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு  தந்தை மாதம்பட்டி சிவகுமார் மறைவுக்குப் பிறகு சத்யன் சில வருடங்களுக்கு முன்பு அங்குள்ள தங்களுடைய பங்களாவை விற்று விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டார்.