வணிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… “இனி ஒரே நாளில் கிடைக்கும்”… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on ஆடி 2, 2025

Spread the love

ஒரு நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர நகர அமைப்பின் மூலமாக அனுமதி வாங்க வேண்டும். இதுதான் தொழில் உரிமம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சட்டம் என்றாலும் அப்போதுதான் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய முடியும். அது தவிர தொழில் வரி போன்றவையையும் வசூலிக்க ஏதுவாக இருக்கும். அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகல் என்றால் இந்த அனுமதி வாங்க வேண்டும்.

இந்த நிலையில் வணிகர்களுடைய நலனுக்காக நகர் பகுதியில் 500 சதுர அடி வரையுள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில்  தொழில் உரிமம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உணவு விற்பனை கடைகளுக்கு மட்டும் இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.