கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 20 பேர் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டவர்கள் என்று கூறப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால்தான் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்திருந்தா.ர் இவருடைய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் புனித் ராஜ்குமார், இயக்குனர் ராஜ் கவுசல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து மரணமடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசு சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் கொரோனா தடுப்பூசிக்கும், இளைஞர்கள் மாரடைப்பால் மரணம் அடைவதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை” என்று நிரூபணம் ஆகி உள்ளது.
