சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு நேர்ந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, சமூக அறிவியல் ஆசிரியை பிரியங்கா சிங் என்பவர் கொடுத்த ஒரு அறிவுறுத்தலை அந்த மாணவர் கவனிக்கத் தவறியுள்ளார். மீண்டும் அதைக் கூறுமாறு மாணவர் கேட்டபோது, ஆசிரியை மிகுந்த ஆத்திரமடைந்துள்ளார்.
ஆசிரியையின் கோபத்தால் அந்த மாணவர் 3 முதல் 4 முறை சரமாரியாகக் கன்னத்தில் அறையப்பட்டுள்ளார். இதில் காது பகுதியில் விழுந்த பலமான அடி மாணவருக்குக் கடுமையான வலியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர், தனக்குச் சரியாகக் காது கேட்கவில்லை என்று தாயிடம் அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவப் பரிசோதனையில் அந்த மாணவரின் இரு காதுகளிலும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, அவரது வலது காதில் 70 சதவீதமும், இடது காதில் 80 சதவீதமும் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…