நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று கூறியிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் . இவர் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். பிப்ரவரி 2-ம் தேதி அதிகாரபூர்வமாக கட்சி தொடங்கியிருப்பதை அறிவித்திருந்த நடிகர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்.
தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் கடந்த வருடம் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு உதவி தொகையும் சான்றுதல்களும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வருடமும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களை கௌரவப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.
இந்த முறை நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களை கௌரவப்படுத்தி வருகிறார். ஏற்கனவே முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்களை அழைத்து கடந்த 28ஆம் தேதி விருது வழங்கியிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் இருக்கும் ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் மீதமுள்ள மாவட்டத்தில் இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் பேசியிருந்தது தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியிருந்ததாவது” நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்பதற்காகவே மிகவும் கஷ்டப்பட்டு படித்ததாக தெரிவித்திருந்தார். மேலும் என் அம்மாவோட பல நாள் ஆசை. என்ன விட எங்க அம்மா தான் விஜயின் தீவிர ரசிகை. விஜய்யை பார்ப்பதற்காகவே படித்தேன். 25 வருடத்திற்கு முன்பு மெரினாவில் விஜய் கட்டவுட் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் விருது வழங்கும் விழாவிற்கு வந்திருக்கின்றேன். இதை விஜய்யிடம் காட்ட விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார். மகளும் அம்மாவும் மகிழ்ச்சியாக பேட்டியளித்திருந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram