ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

By Mahalakshmi on ஜூலை 3, 2024

Spread the love

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை திரும்பி இருக்கின்றார்  நடிகர் அஜித். தற்போது மனைவியுடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித், இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற அனைத்திலும் கை தேர்ந்தவர். இவர் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகிறார்கள். என்னதான் நடிகர் அஜித் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை தவருவதில்லை.

   

   

குறிப்பாக குழந்தைகளின் பிறந்தநாள், மனைவியின் பிறந்த நாள் என அனைத்துக்கும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வந்து விடுவார். இல்லையென்றால் தான் இருக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று அனைத்தையும் சிறப்பாக கொண்டாடிவிடுவார் நடிகர் அஜித். கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜர்பைஜானில் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக சென்றிருந்தார்.

 

அங்கு ஒரு மாத காலம் படப்பிடிப்பு இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் சென்ற வேகத்திலேயே சென்னை திரும்பி இருக்கின்றார் அஜித். மேலும் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவருக்கு மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதால் நடிகர் அஜித் அவசர அவசரமாக சென்னை திரும்பி இருப்பது தெரியவந்துள்ளது.

இது ஒரு சின்ன சர்ஜரி தான் மற்றபடி வேற எந்த பிரச்சினையும் கிடையாது என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் நடிகர் அஜித் அஜர்பைஜானிலிருந்து தற்போது காதல் மனைவியை பார்ப்பதற்கு வந்து இருக்கின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மருத்துவமனையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.