நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியலில் கால் பதித்திருக்கின்றார். விஜய் மக்கள் இயக்கம் என்ற நற்பணி மன்றத்தை தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருக்கின்றார். இந்த கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நடிகர் விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்.
தற்போது சினிமாவில் பிஸியாக நடித்த வரும் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோர்ட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விருதுவிழா ஏற்பாடு செய்யப்பட்டு பரிசு தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அதேபோல் இந்த முறை இரண்டு கட்டங்களாக பிரித்து 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருதுகளும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் கட்டமாக 21 மாவட்டங்களுக்கு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விருது விழா நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக மீதமுள்ள மாவட்டத்தில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு விருது விழா தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நீட் தேர்வு குறித்து பேசி இருந்தார்.
அதைத்தொடர்ந்து மாணவிகளுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றார் நடிகர் விஜய். இதில் பார்வையற்ற மாணவி ஒருவர் நடிகர் விஜயின் கையால் பரிசு பெற்றார் அதை தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது” என்னால் உங்களின் நடிப்பு திறமையை பார்க்க முடியவில்லை என்றாலும், உங்கள் குரலை கேட்க வந்திருக்கிறேன் அண்ணா.
ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன் அண்ணா. இங்கு மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததை விட எங்களையும் எங்கள் பெற்றோர்களையும் அழைத்து மகிழ்வித்து இருக்கிறீர்கள். தமிழகத்தின் தளபதியே, கல்விக்கு கண் கொடுக்கும் நிகழ்கால கர்மவீரரே, உன்னை காண முடியவில்லை என்றாலும் உணர்வால் உன்னை உணர்ந்து உங்களின் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி” என்று பேசியிருந்தார்.
View this post on Instagram