பிரபல நடிகரான தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம். ராயன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சந்தீப் கிஷன், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ஓடிடி-யில் வெளியான பிறகு ராயன் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
அடுத்ததாக தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படம் முற்றிலும் புது முகங்களை வைத்து இயக்கப்படுகிறது. சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் இருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக தனுஷ் இயக்கும் நான்காவது படத்திற்கு இட்லி கடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மேலும் அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். தேனிக்கு அருகே படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது இட்லி கடை பணத்தின் ஒருவரி கதை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து இட்லி கடை படம் இயக்கப்படுகிறது. ராயன் திரைப்படத்தைப் போல ஆக்சன் படமாக இல்லாமல் பீல் குட் படமாக எளிமையாகவும், எதார்த்தமாகவும் தனுஷ் படத்தை எடுத்து வருகிறாராம். இந்த படத்தில் தனுசுக்கு தம்பியாக அசோக் செல்வன் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தான் அந்த படத்தில் நடிக்கவில்லை என அசோக் செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.