மருத்துவர் ஒருவர் ஒரு தாயின் வயிற்றில் அரிய வகை “கல் குழந்தை” எக்ஸ்ரேவில் பதிவானதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது திகைப்பூட்டியுள்ளது. லித்தோபீடியன் அல்லது கல் குழந்தை எனப்படும் அந்த அரிய மருத்துவ நிலையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு வினோதமான எக்ஸ்ரே படத்தை மருத்துவர் டாக்டர் சாம் காலில் என்பவர் பகிர்ந்து உள்ளார். இந்த படமானது ஒரு பெண்ணின் உடலுக்குள் கருவில் கால்சியம் படிந்து இருப்பதை காட்டுகிறது. இது மிகவும் அசாதாரமான நிகழ்வு.
Here’s one of the craziest X-Rays I’ve ever seen
What’s the diagnosis? pic.twitter.com/ojuOUNjD0k
— Sam Ghali, M.D. (@EM_RESUS) July 15, 2025
கர்ப்பத்தின் மிகவும் அரிதான சிக்கல். லித்தோபீடியன் என்ற இந்த சொல் கிரேக்க வார்த்தைகளான லித்தோஸ்(கல்) மற்றும் பேடியன்(குழந்தை) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. எனவே இது கல் குழந்தை என்று சொல்லப்படுகிறது. ஒரு கருவானது கருப்பைக்கு வெளியே இருந்து உருவாகும்போது முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து இறப்பதற்கு முன்பாக இது போன்று நடக்கும். பொதுவாக இவை அறிகுறியற்றவை மற்றும் பெரும்பாலும் பல ஆண்டுகள் கவனிக்கப்படாமல் போகும் பொழுது அறுவை சிகிச்சை அல்லது ஸ்கேனிங் மூலமாக கண்டறியப்பட்டு நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
