100 ஜென்மத்துக்கும் இந்த பாசம் போதுமடா..! பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சூர்யா வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on ஆடி 23, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனான இவர் தற்போது தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கிறார் .இன்று இவர்கள் தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்  போஸ்டர்கள் வெளியானது. இந்த இரண்டு போஸ்டர்களுமே மிரட்டலாக உள்ளது. இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி உள்ளார்.

இதனை அடுத்து இன்று காலை 10 மணி அளவில் கருப்பு படத்தின் மிரட்டலான டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. நேற்று இரவு சூர்யா தன்னுடைய குடும்பத்தோடு கேக் வெட்டி தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இந்த நிலையில் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்க அவருடைய ரசிகர்கள் அவர்கள் அவர் வீட்டில் முன்பாக திரண்ட நிலையில் சூர்யா அவர்களுக்கு வீட்டின் மேல் நின்றபடி கை அசைத்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களோடு செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.