ஆரம்பமானது ‘ஃப்ரீஸ் அண்ட் ரிலிஸ் டாஸ்க்’!… களமிறங்கும் போட்டியாளர்களின் உறவினர்கள்!… உணர்ச்சி பொங்க வெளியான ப்ரோமோ இதோ!…

By Begam

Published on:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது இறுதி கட்டத்தை இயற்றியுள்ளது. 79 நாட்களை நிறைவு செய்த இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் இறுதியாக தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார்.

   

இவரின் எவிக்சன் நியாயமற்றது என்று கூறி நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த வாரம் மணிக்கொடி டாஸ்க் நடைபெறும் என்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவித்திருந்தார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக போட்டியாளர்களின் செல்லபெயர்களை சொல்லி அழைத்து ஃப்ரீஷ் அன்ட் ரிலீஸ் டாஸ்க் ஆரம்பம் என்று கூறுகின்றார். இதை தொடர்ந்து போட்டியாளர்கள் மிக சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்.. அமுதவாணன் மற்றும் சிவின், மைனா நந்தினி ஆகியோரை பார்க்க அவர்கள் வீட்டில் இருந்து வந்துள்ளனர்..

குடும்பத்தில் உள்ளவர்களை பிரிந்து வாழும் போட்டியாளர்கள் அவர்களை கண்டவுடன் மகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்து அழும் இந்த ப்ரோமோ பார்ப்பதற்கு உணர்ச்சி பூர்வமாக உள்ளது. 

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….