பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்புவின் தற்போதைய நிலை இதுதானா?… அவருக்குள் இப்படி ஒரு சோகமா!… தீயாய் பரவும் தகவல் இதோ!…

பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்புவின் தற்போதைய நிலை இதுதானா?… அவருக்குள் இப்படி ஒரு சோகமா!… தீயாய் பரவும் தகவல் இதோ!…

நடிகர் கஞ்சா கருப்பு வின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த’ பிதாமகன்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகர் கஞ்சா கருப்பு. இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மக்களால் மிகவும் கவரப்பட்டது.

இதை தொடர்ந்து முன்னணி நடிகர்களான விக்ரம், சூர்யா, விஜய், ஜீவா, தனுஷ், விஷால், சசிகுமார், அருண் விஜய் என அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தனது திரைப்பயணத்தில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகர் கஞ்சா கருப்பு 2010ல் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளர்கள் என்று நாம் ஒரு சிலரை மட்டுமே கூற முடியும். ஆனால் பலர் தோல்வியே அடைந்துள்ளனர்.

அப்படி சினிமா துறையில்  தான் சம்பாதித்த பணத்தை தயாரிப்பில் இறக்கி இழந்த நடிகர்கள் வரிசையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்பும் ஒருவர். காமெடி நடிகரான கஞ்சா கருப்பு ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். 2013ல் வெளியான இந்த படம் பலருக்கும் தெரியாது. இவர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தையும் சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும் போட்டு இந்த படத்தை அவர் தயாரித்துள்ளார்.

ஆனால் இப்படம் சரியான வசூலை பெறவில்லை. தோல்வியிலேயே முடிந்தது. இதனால் சொந்த வீடு கையில் இருந்த பணம் அனைத்தையும் இழந்து தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார் நடிகர் கஞ்சா கருப்பு.

இதைப்பற்றி அவர் கூறும் பொழுது ‘இயக்குனர் பாலா அண்ணாவும், அமீர் அண்ணாவும் படம் எடுப்பது அவ்வளவு சாதாரணம் விஷயம் அல்ல. சிக்கினால் சிதறி விடுவாய்’ என்று எச்சரிக்கை செய்தனர். நான் தான் அதனை கேட்காமல் படம் எடுத்தேன்’ என்று கூறி புலம்பியுள்ளார். தற்பொழுது இவர் கிடைக்கும் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறாராம்.

Begam